இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி ஹீன்கெந்த பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நிர்வாக சேவையில் உயர் அதிகாரி ஒருவரை நியமிப்பது குறித்து பரிசீலனையில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.