அனைத்து கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் தாம பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகருக்கு கூறியதாக நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார் கட்சி கூட்டத்தின் போது சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
எனவே இதனை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் சஜித் கூறினார். ஜனாதிபதிக்கு , அந்த சந்தர்ப்பத்தை வழங்கத் தயாராக உள்ளதாகவும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்தார்

