பிரான்ஸ் பாரிஸ் நகரில் வசிக்கும் தமிழர் ஒருவரின் செயலினால் சில தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளனர்.இதனால் தமிழர்கள் மத்தியில் விரக்தி நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தமிழர் வீட்டின் உரிமையாளரான சற்று வயதான ஒருவர் ஆவார்.இவர் வீட்டில் பல தமிழ் இளைஞர்கள் வாடகைக்கு தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பல நாட்களாக இவருக்கு கொரானா அறிகுறிகள் இருந்தும்,பலர் அதை எடுத்து சொல்லியும் அசண்டையீனமாக இருந்துள்ளார்.இதன் காரணமாக அங்கு குடியிருந்தவர்கள் கொரானா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவரவர் அறைகளில் கொரானா சோதனைகளை முடித்து தொற்று என்று சொல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில்தான் குறித்த நபர் சோதனைக்கு சென்றும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தயவு செய்து சமூக பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்,அமசடக்காக இருந்து எதையும் சாதிக்க போவதில்லை,கொரானா என்பது வெட்கப்படும் ஒன்றும் அல்ல,சாதாரண ஒன்றுதான்.
எனினும் கூட உள்ளவர்கள் அவர்களை நம்பி பல குடும்பங்கள் என்று எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் எமது உறவுகள் கொரானா இடர்காலத்தை கழித்து வருகின்றனர்.அவர்களுகு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை,உபத்திரம் கொடுக்காமல் இருங்கள்.