பச்சைப் பட்டாணிக் கடலையை வாங்கி வீட்டுக்குக் கொண்டுசென்று கழுவியவர் கடும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து அவர் தகவல் தருகையில்,
”இன்று எங்கள் வீட்டில் மதிய உணவு தயார் செய்வதற்காக சேலம் கடைத்தெருக்களில் வாங்கப்பட்ட பச்சை பட்டாணியை தண்ணீரில் ஊறவைத்து கழுவி சமைக்க முற்பட்ட பொழுது பச்சைப் பட்டாணியின் நிறம் முழுவதுமாக பச்சையாக நிறமாக மாறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் மீண்டும் ஒருமுறை சுடுநீர் கொண்டு கழுவும் பொழுது மீண்டும் அதே போல் பச்சை நிறமாகவே மாறியது.
எனவே தயவு செய்து பொதுமக்கள் இதுபோன்ற பச்சைபட்டாணி வாங்கும் பொழுது விழிப்புணர்வுடன் பல ரசாயன கலப்படம் இல்லாத நல்ல தரமான பொருட்களை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோல் பல நச்சுக் கழிவு உள்ள ரசாயனங்கள் கலந்த உணவை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது பலவிதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே மக்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம்.” எனறார்.