நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
“நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறாமை, நிதி நெருக்கடியை ஏற்படுத்தியமை, மக்கள் மீது விலையேற்றம் என்ற சுமையைத் திணித்தமை உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பிரேரணை முன்வைக்கப்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுந்தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. சாதாரண பெரும்பான்மைகூட ஊசலாடும் மட்டத்திலேயே உள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதான எதிரணி இப்படியொரு வியூகத்தைக் கையாள எதிர்பார்த்துள்ளது.