பெற்றோரை இழந்து பரிதவித்த குழந்தைகளை தத்தெடுக்க முன்வந்த வைத்தியர்இலங்கையை உலுக்கிய விபத்தாக அண்மையில் இடம்பெற்ற பசறை விபத்து பதிவாகியுள்ளது.
இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.இதில் பலர் தமது குடும்பத்தை இழந்துள்ளதோடு, சிறு குழந்தைகளும் பெற் றோரை இழந்து தவிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், பசறை விபத்தில் பெற்றோரை இழந்து அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கு உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார்.இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்தது லுனுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதையடுத்து, குறித்த குழந்தைகளுக்கு உதவ அம்பாறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வஜிர ராஜபக்க்ஷ முன்வந்துள்ளார்.அதன்படி ‘மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி, 3 குழந்தைகளையும் தத்தெடுக்க பசறை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, டாக்டர் வஜிர ராஜபக்க்ஷவின் கோரிக்கை குறித்து பசறை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவருடைய செயலை குறித்து பலரும் பாராட்டி வருவதோடு, மேலும் பலர் உதவ முன்வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.