பொதுவாக நாம் சமைத்து சாப்பிடும் உணவை விட திரவமாக எடுத்து கொள்ளும் உணவுகள் இலகுவாக செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது.
இதன்படி, காய்கள், இறைச்சி வகைகள், மசாலாப் பொருட்கள் என்பவற்றை கலந்து ஒன்றாக கொதிக்க வைத்து குடிப்பது தான் சூப். இவ்வாறு செய்யும் சூப்களில் ஆட்டிறைச்சி, ஆட்டுக்குட்டி இறைச்சி, ஆட்டின் கால்களின் எலும்புகள் உள்ளிட்டவைகளை போடுவார்கள்.
அதே சமயம் சைவ பிரியர்களாக இருந்தால் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை போட்டு சூப் வைத்து குடிப்பார்கள். தமிழக மக்களை பொருத்தவரையில் சூப் என்றால் அதனை இறைச்சி வகைகளில் தான் செய்வார்கள்.
அதிலும் குறிப்பாக ஆட்டுக்கால் சூப் உடல் நல பிரச்சினைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. இதனை பண்டைக்காலம் முதல் செய்து வருகிறார்கள். சளி பிரச்சினையுள்ளவர்கள் மற்றும் உடலில் போதுமானளவு சத்து இல்லாதவர்கள் ஆட்டு கால் சூப் செய்து குடிப்பார்கள். உடனே இது போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
அந்த வகையில், உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்குவதாக கூறப்படும் ஆட்டுக்கால் சூப்பை குடிப்பதால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஆட்டுக்கால் சூப் குடிக்கும் ஒருவரின் உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு பலப்படுத்தப்படும். இதனால் அவர்களை நோய்க்கிருமிகள் தாக்குவது குறைவாக இருக்கும். உடலுக்கு தேவையான அவசியமான சத்துக்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஆட்டு கால் சூப்பில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. ஏனெனின் ஆட்டுக்கால் சூப்பில் கால்சியம், தாமிரம், போரான், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் உள்ளன. அத்துடன் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் உள்ளன. இவை எலும்புகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகின்றன.
சிலர் சுவாச பிரச்சினையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் கொடுக்கலாம். இது அவர்களுக்கும் சுவாசத்துடன் தொடர்பான நோய்கள் குணமாக்க உதவியாக இருக்கிறது. அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
ஆடு கால் சூப்பில் சிஸ்டைன், அர்ஜினைன், குளூட்டமைன், புரோலின், அலனைன் மற்றும் லைசின் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடலின் செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான அமிலங்களையும் வழங்குவதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதன் காரணமாக தான் எமது முன்னோர்கள் அதனை நோயாளிகளுக்கு மருந்தாக கொடுத்துள்ளனர்.
மூட்டு வீக்கம் அல்லது வீக்கம் பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஏனெனின் இதில் குருத்தெலும்பு வளர்ச்சி மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த குளுக்கோசமைன் மற்றும் காண்ட்ராய்டின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் வீக்கம் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கிறது.