நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெறுவதற்கு பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் உடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இலங்கையை மீட்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இதன் போது தெரிவித்தார்.