தற்காலத்தில் அனைத்து விடயங்களிலும் மனிதனுக்கு வழிகாட்டியாக உள்ளது தான் AI ( artificial general intelligence) (ChatGPT) .
ஒருவகையில் இவை மனிதனின் வேலைகளை இலகு படுத்தினாலும் அவை சில நேரங்களில் மனித மூளையை கட்டுப்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது அது தொடர்பில் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.
இதேவேளை, குறிப்பாக, சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளின் பயன்பாடு, தற்போது மனித உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கு சான்றாக அமெரிக்காவில் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சாட்ஜிபிடி (ChatGPT) உடனான கலந்துரையாடலின் பின்னர் தனது உயிரை மாய்துக்கொண்ட மற்றும் கொலை செய்த சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவில் (ChatGPT) சாட்ஜிபிடி உடனான உரையாடல்களுக்கு பின்னர் 16 வயது சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறி பெற்றோர் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆடம்ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்த சாட்ஜிபிடி உடன் விவாதித்த போது அதற்கு பதிலளிக்க மறுக்காமல் அதற்கான எண்ணங்களை சாட்ஜிபிடி மேலும் தூண்டியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் சாட்ஜிபிடி உடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தவறியதற்காக ஓபன்AI மீது 40 பக்க அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் (ChatGPT) சாட்ஜிபிடி செயலியின் அறிவுரையின் படி ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த குறித்த நபர் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்ஜிபிடியுட ன் பல மணிநேரங்கள் அவர் உரையாடி வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
குறித்த உரையாடலின் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் (ChatGPT) சாட்ஜிபிடி பயன்பாடு குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

