மொனராகலை பரையன் நீர்வீழ்ச்சியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளனர்.
23 வயதுடைய தங்கை நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்துள்ள நிலையில், அவரை காப்பாற்ற அவரின் அண்ணன் நீரில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். காமினிபுர பிரதேசத்தை சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
8 பேர் கொண்ட குழுவொன்று நேற்று பிற்பகல் பரையன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.