பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது வசதிகள் தொடர்பிலோ எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தன்னிடம் கூறியதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
குறித்த கைதிகளுடனான கலந்துரையாடலின் போது அவர்கள் இதனை தெரிவித்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
” இங்குள்ள பாதுகாப்பு அல்லது வசதிகளில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என குறித்த கைதிகளிடம் நான் கேட்டேன். அவர்கள் உடனடியாக இங்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்று கூறினர்”.
இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையை ஓயமடுவுக்கு கொண்டு செல்லும் எதிர்ப்பார்ப்பு உள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.