திருமண வாழ்க்கையில் பல முக்கிய நிகழ்வுகள் இருக்கும் காதல் செய்வது பெரிதல்ல…திருமணம் நடைபெற வேண்டும் …. திருமணம் செயத பிறகு வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம் ……
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
திருமணம் செய்த எந்த ஜோடியும், திருமணத்திற்கு பின் ஹனிமூன் செல்வார்கள்…ஜாலியாக இருப்பார்கள் …மனதளவிலும் உடலவிலும் இணைவார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரிந்தது தான் ….
கல்யாணம் ஆனது முதல் முப்பது நாள் வரை மோகம் அதிகமாகத்தான் இருக்கும்.அதற்கடுத்த முப்பது நாட்களுக்கு மோகமும் ஆசையும் சேர்ந்தே இருக்கும்…
அதன் பின்னர் .. குடும்பம் என்றால் என்ன ? குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி நடந்துக் கொள்வது என பல விஷயங்கள் தொடரும்….
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்…..திருமணம் ஆன பிறகு உடலளவில் கட்டாயம் இணைய வேண்டிய தருணம் ஏற்படுகிறது அல்லவா?…அது தாம்பத்யமா அல்லது வெறும் உடலுறவா என்பதை பார்க்கலாம் ..
நீங்கள் கேட்கலாம் அது என்ன தாம்பத்யம் வேறு? உடலுறவு வேறா என்று …?
ஆமாம் இரண்டும் வேறுதான்…..அது எப்படி என்பதை பார்க்கலாம் …..
ஆங்கிலத்தில் …
INTERCOURSE -உடலுறவு என தமிழில் பொதுவாக சொல்கிறோம்.இதனை இரண்டு விதமாக சொல்லலாம்…
LOVE MAKING – தாம்பத்தியம்
HAVING SEX- உடலுறவு
சூழல்
சூழல் அமைந்து வரும் போது இணைவது தாம்பத்தியம். அது காதலின் வழியே கூடுதல். சூழலை அமைத்துக் கொண்டு கூடுதல் உடலுறவு
உணர்ச்சி
வெற்றி, மகிழ்ச்சி, சோகம், என பல்வேறு உணர்ச்சி சூழலின் வெளிப்பாடாக வருவது தாம்பத்யம்
கட்டிலில்
கட்டித் தழுவி, உடல் வருடி உரசி, தேகம் எனும் சதையை பிசைந்து சூழலை செயற்கையாக உண்டாக்கி இணையும் அனைத்துமே உடலுறவு தான்….
காதல்
காதல் மூலம், அதாவது மனதின் வழியே இணைந்த பிறகு கூடுதல் தாம்பத்தியம்.
உடலின் வழியே மட்டும் கூடி பிரிவது உடலுறவு.
காதலின் வழியே இணைவது தாம்பத்தியம், இச்சையின் வழியே இணைவது உடலுறவு.
எடுத்தோம், கவிழ்த்தோம்!
இருமுறை படியுங்கள் இதை ..!
ஒரு காட்சியில் துவங்கி, பிறகு இணைந்து அடுத்த காட்சிக்கு நகர்வது தாம்பத்தியம்.
உடல் இணைதல் மட்டுமே காட்சியாக அமைவது உடலுறவு.
தாம்பதயத்தில் பொதுவாகவே முதலில் அன்புடன் பேசுவதும், ஆசையாக நடந்துக்கொள்வதும், சில நிமிடங்கள் இது போன்றே நகர்ந்து பின்னர் முடிவில் கூடுதல் தான் தாம்பத்யம்
அதெல்லாம் இல்லாமல்,வந்தவுடன் நேராக இருவரும் உடலுருவில் ஈடுபடுவது …உடனே ஆடையை உடுத்திக்கொண்டு வேறு வேலையை செய்வது உடலுறவு…..
பேசி மகிழ்ந்து, கூடி குலவிய பிறகு மீண்டும் பேசி மகிழ்தல் தாம்பத்தியம்.
முடிவில்..!
முடிவில் காதல் அடுத்த நிலைக்கு உயர்ந்திருந்தால்… மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிருந்தால், பாரமற்ற நிலையால் இரு உடல் நிலத்தில் மிதந்திருந்தால்…. அது தாம்பத்தியம்.
எப்படியோ அனுபவித்தாயிற்று… அடுத்த வாய்ப்பு எப்போதோ, சூழல் எப்போது அமையுமோ என்ற எண்ணம் எள்ளளவு மனதை சூழ்ந்திருந்தாலும் அது வெறும் உடலுறவே……
கருத்து என்ன தெரியுமா ?
திருமணமான பலரும் உடலுறவில் மட்டுமே ஈடுபட்டு வரலாம்… திருமணம் செய்யாத காதலர் கூட தாம்பத்தியத்தில் ஈடுப்பட்டு வரலாம்.
மேற்குறிப்பிட்ட விளக்கம் தான் நிதர்சனமான உண்மை…..இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் நாம் வாழும் இந்த இயந்திர வாழ்கையில்,தாம்பத்யத்தில் ஈடுபடுகிறோமா அல்லது உடலுறவில் ஈடுபடுகிறோமா என்று