இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் தன் சொந்த தங்கையை கோடாரியால் அண்ணன் வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
IFrame ஆந்திரா மாநிலம், அனந்தபூர் பகுதியில் உள்ள பெனகசெர்லா கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நிலத்தகராறு காரணமாக தனது சகோதரியை , சகோதரர் கோடாரியால் தாக்கிய சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த பொஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணைக் கோடாரியால் தாக்கியவரை பிடித்தனர். வெட்டப்பட்ட பெண் மெஹபூபி என்றும், அவரை கோடாரியால் வெட்டியவர் ஜிலானி என்பதும் தெரிய வந்தது. தாக்குதலில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெனகசெர்லா கிராமத்தில் ஜிலானியின் தங்கை மெஹபூபி ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டைக் காலிச் செய்யச் சொல்லி ஜிலானி மிரட்டி வந்துள்ளார். அவர் வீட்டைக் காலி செய்யாத ஆத்திரத்தில் ஜிலானி கோடாரியால் தாக்கியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மெஹபூபியை தாக்கிய ஜிலானியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சட்டப்படி, அந்த வீடு யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.