குறித்த நேரத்திற்கு கொரோனா தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, (Namal Rajapakse) நாட்டின் இளைய தலைமுறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களின் சதவீதம் குறைந்து காணப்படுவது தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.