நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ மற்றும் சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2000 கோடி ரூபா முதலீடு செய்தமை தொடர்பிலான வழக்கின் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (14) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை
இதன்போது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 8 ஆம் திகதிக்கு மேற்கொள்வதற்கும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சுஜானி போகொல்லாகம சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 20ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பங்களாதேஷூக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கினார்.