மக்களின் எதிப்பால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவர் விரும்பினால் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும் எனவும் அதற்கு பக்க பலமாக நாம் இருப்போம் எனவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக கூறப்படுகின்றது. எனினும் தனது விசாகாலம் முடிவடைய மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு வந்தவுடன் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.