யாழ்ப்பாணத்தில் சீன தொழிலாளியென தான் தவறுதலான புகைப்படத்தை பதிவேற்றியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும், வடக்கில் பணியாற்றும் சீனர்கள் பற்றிய புகைப்படங்களை விரைவில் பதிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று முன்தினம் காலையில் வெளியிட்ட ருவிட்டர் பதவொன்றில் சீன பிரஜை ஒருவர் பருத்தித்துறை மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் ஞாயிறு 27 ஜூன் 2021 இல் குடத்தனையில் எனது வீட்டிற்கு அருகாமையில். யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாட, ஏன் உள்ளூர் தொழிலாளர்களை இவ் வேலைகளுக்கு நியமிக்க முடியாது? என குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அவர் பதிவிட்ட புகைப்படத்திற்குரியவர் சீன நாட்டவர் அல்ல, அக்கரைப்பற்றை சேர்ந்த முஸ்லிம் குடும்பஸ்தரான முகமட் முஸ்தபா முகமட் ஹனீபா என குறிப்பிடப்பட்டது.
அவர் குடத்தனையில், அந்த பகுதி பெண்ணொருவரை திருமணம் முடித்து வாழ்வதாக கூறப்பட்டது. இதையடுத்து, அந்த படத்தை நீக்கிய சுமந்திரன், பதிவில் திருத்தம் செய்திருந்தார். வடக்கில் உள்ள சீனர்கள் பற்றிய படங்களை பதிவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலைமையை அவதானித்து குஷியான சீன தூதரகம் இடையில் புகுந்து பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சீன நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வருவதில்லையாம், அதற்கு செலவு அதிகமமாம், அதனால் உள்ளூர் தொழிலாளர்களையே கொண்டு வருவதாக கூறியுள்ளது.
சீன நிறுவனங்களின் வரவு பற்றிய தொடர் விமர்சனத்திற்கு தூதரகம் மூச்சும் காட்டாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கீழ் உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.