நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நிச்சயமாக நாட்டை கட்டியெழுப்புவார் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குணுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எதாவது ஒன்று இருக்குமாயின் அது தகுதியானவனுக்கு கிடைக்க வேணடும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரணில் விக்kiரமசிங்க நாட்டின் பொறுப்புக்கு வந்து, மாறுவேடம் பூண்ட ஆசிர்வாதம் போன்று நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்புக்கு பலம் சேர்த்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மிகிந்தலை ரஜமஹா விகாரைக்கு நேற்று சென்ற ஜனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிகளை பெற்றுக்கொண்ட பின்னர், தம்மரதன தேரரை சந்தித்து நலன் விசாரித்த போது, குறுகிய உபதேசம் ஒன்றை வழங்கி தேரர் இதனை கூறியுள்ளார்.
பௌத்த சங்கத்தினர் பிரித் ஓதி ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியதுடன் மிகிந்தலை நினைவுக்குறிப்பையும் அவரிடம் கையளித்தனர்.