நாட்டில் பரவும் வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தொடர்பிலான அடுத்தகட்ட ஆய்வுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு பீடத்தின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 16 வகையான மாதிரிகளின் ஊடாக இந்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் பெறுபேறுகள், எதிர்வரும் 18ம் திகதி வெளியிடப்படும் என அவர் கூறுகின்றார்.
இதேவேளை, நாட்டில் பரவும் கொவிட் வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை இரு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.