பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரு தினங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.
இந்த தகவலை இலங்கை மதுவரித்திணைக்களம் வெளியிட்டிருக்கிறது.
கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுக்கடைகளுக்கு திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4200 ஆகும்.