இலங்கையின் தற்போதைய சூழ்நிலை காரணமாக திருமணத்தின் பின்னர், ஐந்து பிள்ளைகள் பெற்றெடுப்பதை கட்டாயமாக்குமாறு முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் (P. Harrison) தெரிவித்துள்ளார்.
இன்று (02-01-2022) தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை முழுவதும் அனைத்து விடயங்களுக்கும் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதை அடுத்தே, தான் இந்த யோசனையை அரசாங்கத்திற்கு முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இளைய பிள்ளையை எண்ணெய் வரிசையில் நிறுத்த முடியும், இரண்டாவது பிள்ளை எரிவாயு வரிசையில் நிறுத்த முடியும், மற்றைய பிள்ளையை பால்மா வரிசையில் நிறுத்த முடியும்,
மேலும், அடுத்த பிள்ளையை சீனி வரிசையில் நிறுத்த முடியும், கஞ்சியையாவது அருந்துவதற்காக அடுத்த பிள்ளையை அரிசி வரிசையில் நிறுத்த முடியும்” இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் (P. Harrison) தெரிவித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.