எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுத்து அதனை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பை கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளது.
நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்ட அரசியல் பீட கூட்டம் இன்று கொழும்பில் கூடியுள்ளது.