அதிக வருமான வரி விதிப்புக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வங்கிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் இதனால் பொல்துவ சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.