நாடாளுமன்றத்தின் பெகாஸஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் என பல விடயங்களை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முக்கிய சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இந்த வாரத்தில் 4 சட்டமூலங்களை நிறைவேற்ற அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.† அதேநேரம் சில அரசாணைகள் சட்டமூலங்களாக தாக்கல் செய்யப்பட ஆறுவார கால அவகாசம் மட்டுமே உள்ளது.
அவை காலாவதியாகிவிட்டால் மீண்டும் புதிய அரசாணைகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.