நாடளாவிய ரீதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 598 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,580 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 நபர்களை இதன்போது பொலிஸார் அடையாளம் கண்டனர்.
மேலும், பிடியாணை நிலுவையில் உள்ள 418 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 45 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
மேலும் 16 பொறுப்பற்ற சாரதிகள் மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,857 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.