அமெரிக்காவில், ஒரு குழந்தை நள்ளிரவில் கிட்ட வராதே, தள்ளிப்போ என கத்துவதை கவனித்த அக்குழந்தையின் பாட்டி, குழந்தைகள் தூங்கும் அறையில் கமெரா ஒன்றை பொருத்திவைத்துள்ளார்.
லாஸ் வேகல்ஸைச் சேர்ந்த Tory McKenzie (41) என்ற அந்த பெண்மணி, பிறகு அந்த கமெராவில் என்ன பதிவாகியிருக்கிறது என்று பார்க்க, அவர் கண்ட காட்சி அவரை திகிலடைய வைத்துள்ளது.
ஆம், McKenzieயின் பேத்தியான Amber (2) மற்றும் பேரனான ஏழு மாதக்குழந்தை Michael ஆகியோர் தூங்கும் அறையில், அவர்கள் கட்டிலுக்கருகே, தலையில் கொம்புகளுடனும், கையில் நீண்ட நகங்களுடனும் ஒரு உருவம் நிற்பதைக் கண்டு அவருக்கு மயிர்க்கூச்செறியும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனே தன் பிள்ளைகளிடம் இந்த தகவலைச் சொல்லி, குழந்தைகளை அவர்களது பெற்றோர் தூங்கும் அறைக்கு மாற்றிவிட்டார் McKenzie.
இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த வீடியோவில் தெரிந்த உருவத்தைக் கண்டு பெரியவர்கள் எல்லாம் திகிலடைந்த நிலையில், கிட்ட வராதே, தள்ளிப்போ என தூக்கத்தில் கத்திய குழந்தையான Amber அதைக் கண்டு பயப்படவில்லையாம்.
அதை தன் நண்பன் என நினைக்கும் Amber, அதனிடம் தான் ஒரு நாள் மட்டும் தள்ளிப்போ என கூறியதைத்தான் தன் பாட்டி கேட்டதாக கருதுகிறாளாம்.
இதற்கிடையில், அந்த உருவத்தை எப்படியாவது வீட்டிலிருந்து துரத்த, ஆவிகளுடன் இடைபடும் பணி செய்வோரை அணுகியுள்ளார் McKenzie.