நமது உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளது என்று அர்த்தம்.
இன்சுலினின் சமசீரற்ற சுரப்பினால் தான் நீரிழிவு நோய் ஒருவருக்கு ஏற்படுகிறது.
பொதுவாக இன்சுலின் ஹார்மோன் ஆனது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது.
சில சமயங்களில் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படலாம், இதனால் ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்படுகிறது.
கல்லீரல் அதிகப்படியான குளுக்கோஸை உருவாக்கும் போது உடல் மிகக் குறைவான இன்சுலினை உற்பத்தி செய்யும் போது உயர் ரத்த சர்க்கரை பிரச்சனை ஏற்படுகிறது.
சாமந்திப்பூ தேநீர்
சாமந்திப்பூ தேநீர் நீண்ட காலமாகவே பல நோய்களுக்கும் சிறந்த தீர்வினை அளித்து வருகிறது.
இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த தேநீரை குடிப்பதால் உடலிலுள்ள ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படும் என்று சில ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
ஆய்வுகளின்படி உணவுக்குப் பிறகு ஒரு கப் சாமந்திப்பூ தேநீர் குடிப்பது இரத்த சர்க்கரை, இன்சுலின் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவும்.
காய்கறி ஜூஸ்
பழச்சாறுகளில் 100% சர்க்கரை இருப்பதால் அதற்கு பதிலாக தக்காளி சாறு அல்லது காய்கறி சாறு போன்றவரை குடிக்கலாம்.
காய்கறி ஜூஸ் கூடுதல் சுவையாகவும், வைட்டமின்கள் நிறைந்த ஊட்டச்சத்து பானமாக இருப்பதற்கு பச்சை காய்கறிகள், செலரி அல்லது வெள்ளரிகள் மற்றும் சில பெர்ரிகளுடன் சேர்த்து கொள்ளலாம்.
இதனை குடிப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கப்பெற்று ரத்த சர்க்கரையின் அளவும் குறைகிறது.
கொம்புச்சா தேநீர்
கொம்புச்சா எனப்படும் புளித்த பானம் கருப்பு அல்லது பச்சை தேயிலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த தேநீரில் புரோபயாடிக்குகள் அதிகம் நிறைந்துள்ளது.அதாவது வயிற்றில் காணப்படும் ஒருவகை நல்ல பாக்டீரியா தான் இந்த புரோபயாடிக்குகள் ஆகும்.
இந்த தேநீரை சாப்பிடும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுகிறது.
பச்சை ஸ்மூத்தி
பச்சை ஸ்மூத்திகள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பதோடு உடலுக்கு தேவையான அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.
இந்த ஆரோக்கியமான ஸ்மூத்தியை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்.
கீரை, முட்டைக்கோஸ் அல்லது செலரி போன்ற பச்சை காய்கறிகளுடன் சில ப்ரொட்டீன் பவுடர் மற்றும் சில பழங்களை சேர்த்து இந்த ஸ்மூத்தியை தயாரித்து கொள்ளலாம்.
தினசரி கார்போஹைட்ரேட் உணவுடன் நீங்கள் பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை இல்லாத காபி
பொதுவாக காபி டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.
பால், கிரீம் அல்லது சர்க்கரையுடன் கூடிய காபி உங்கள் உடலில் அதிக கலோரிகளை சேர்ந்துவிடுகிறது மற்றும் இதனை குடிப்பதால் உடலிலுள்ள இரத்த சர்க்கரையின் அளவும் அதிகரித்து விடுகிறது.
அதிக கலோரி மற்றும் ரத்த சர்க்கரை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் சர்க்கரை இல்லாத காபியை குடிக்க வேண்டும்.
குறைந்த கொழுப்புள்ள பால்
பால் உணவில் கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்கிறது என்றாலும் பாலில் குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது.
ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று 8-அவுன்ஸ் கிளாஸ்களுக்கு மேல் பால் அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும்
எப்போதும் இனிக்காத குறைந்த கொழுப்பு உள்ள பாலையே குடிக்க வேண்டும்.
மஞ்சள் கலந்த நீர்/பால்
இந்த மஞ்சள் நிற பானத்தில் குர்குமின் நிறைந்துள்ளது இது கணையத்தின் செயல்பாட்டை பராமரிக்க உதவுவதோடு, டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தையும் குறைக்க உதவுகிறது.
மஞ்சள் கலந்த பாலை குடிப்பது ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.