தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மீது ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் நண்பனையே கால்வாயில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி அருகே ஆதியூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் வாங்கினார். இந்நிலையில் கடந்த 7ம் திகதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து வழக்கு பதிவுசெய்த பொலிசார் அவரை தேடிவந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பர் உதயகுமாரிடம் இருந்து புருஷோத்தமனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகனத்திற்கு ஆசைப்பட்டு அவரை அழைத்துச்சென்று காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பொலிசார் கடந்த 3 தினங்களாக புருஷோத்தமனின் உடலை திருமூர்த்தி அணை, கால்வாய் பகுதியில் தேடி வருகின்றனர்.ஆனால் இதுவரை உடல் கிடைக்கவில்லை. தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.உதயகுமார் மீது பைக் திருடியது மற்றும் கொலை வழக்கு பதிவுசெய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.