பௌத்த மதகுரு ஒருவர் மது அருந்திவிட்டு, நடுவீதியில் பொலிஸாருக்கு தகாத வார்த்தைகளால் புரட்டி எடுத்த சம்பவமொன்று காலியில் பதிவாகியுள்ளது.
இச் சம்பவம், காலி – ஜின்தொட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிறிதொரு பௌத்த மதகுரு ஒருவரை, மது அருந்தியிருந்த மதகுரு கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை பார்த்த மக்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவரை கைது செய்ய முற்பட்ட போது குறித்த மதகுரு பொலிசாரை கடுமையாக பேசி தாக்கியுள்ளார்.
குடி போதையில் பௌத்த மதகுரு, அனைவரையும் அடித்து விரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
காணி பிரச்சனை ஒன்றின் காரணமாகவே குறித்த கலவரம் நடந்துள்ளது.
மத குருவின் மேலாடை கழன்று விழுந்த நிலையிலும், சண்டித்தனத்தை அடக்க முடியாமலும், எதிர்த்து ஏதும் செய்ய முடியாத நிலையில் பொலிஸார் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்ததாக மக்கள் தெரிவித்தனர்.
எனினும், அவரை கைது செய்து நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த பிக்குமனநலம் பாதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.