சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்து வெளியாகும் வீடியோக்களை விட சாய்பல்லவி நடனமாடும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
மேலும் பல மில்லியன் பார்வையாளர்களையும் குவித்து வருகிறது. சாய் பல்லவி என்ற பெயரைக் கேட்டாலே தெலுங்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு வரவேற்பு இருக்கிறது. நாளுக்கு நாள் சாய் பல்லவி மார்க்கெட் அங்கு பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் சாரங்கதரியா என்ற பாடல் வெளியானது. வெளியான சில நாட்களிலேயே 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது அந்த வீடியோ பாடல். இத்தனைக்கும் அது ஒரு லிரிக் பாடல் என்பதும், இடையில் சாய்பல்லவியின் நடனம் கொஞ்சம் கொஞ்சம் இடம் பெற்றிருந்ததும் இந்த வீடியோவை தற்போது வைரல் ஆகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக சாய்பல்லவி மற்றும் ராணா டகுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் விரட்டாபருவம் என்ற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் டீசரில் சாய் பல்லவி காட்டுக்குள் வைத்து சில பேர் தவறான முறையில் நடந்து கொள்வதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காதலரைத் தேடி செல்லும் இளம் பெண் படும் கஷ்டத்தை கூறியுள்ளது போல் படத்தின் டீசர் விளக்குகிறது.
மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரியாமணி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரட்டா பருவம் டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.