நண்பர் ஒருவர் ம ருத்துவராக உளளார், கல்யாண வயதில் உள்ளதால் ம ருத்துவம் படித்த பெண்ணையே தேடிக்கொண்டிருக்கிறார்கள். நண்பருக்கு வசதிக்கு எந்த குறைச்சல் இல்லை, இன்னும் ஏழு தலைமுறைக்கு சொத்து உள்ளது. இருந்தாலும் ‘ஏம்ப்பா! கட்டிக்க போற பொண்ணு பிள்ளையும் கூட டா க்ட்டராக இருக்கணும் பார்க்கறீங்க? நீயும் டா க்ட்டர் நல்லாவே சம்பாதிக்கிற, உங்களுக்கு சொத்தும் கிடக்குது. இருந்தாலும் டா க்ட்டர் பொண்ணு வந்து சம்பாதிப்பதை வைத்தா நீங்க குடும்பம் நடத்த போறீங்க? ஏதாவது டிகிரி படித்த, வசதியான குடும்பத்தை சேர்ந்த, குடும்பத்தை நல்லா கவனிக்கும் பொண்ணா பார்த்து சொல்றேன்’ என நண்பரை பார்க்க வரும் தரகர்கள் சொல்வதுண்டு.
ஆனால் நண்பரும் அவரது குடும்பமும் டா க்டர் பொண்ணு தான் வேண்டும் என அ டமாக நிற்கிறார்கள். கவுரவத்திற்காக அப்படி பார்க்கிறார்கள் போல என நண்பர்கள் எல்லோரும் நினைத்து கொண்டிருந்தோம். ந்ண்பர்க்கு டா க்டர் பொண்ணு கிடைத்தால் ஜாதகம் செட் ஆகாமல் இருக்கும். செட் ஆகும் ஜாதகம் டாக் டர் பொண்ணாக இருக்காது. எல்லாமே மேட்ச் ஆனாலும் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை பக்கம் ஏதாவது பிடிக்காமல் போய் செட் ஆகாமல் போய்விடும். இதேநிலை தான் இரண்டு மாதம் நீடித்தது. இப்படியே போனால் இவனுக்கு கல்யாணம் நடக்காது என டாக்டர் நண்பரிடம் அறிவுரை செய்தோம், ‘டா க்டர் பொண்ணு வேண்டாம். வேறு ஏதேனும் டிகிரி படித்த பெண்ணையே பார்க்கலாம்ல?’ என்றோம்.
- அதற்கு நண்பர் தான் ஏன் டா க்டர் பொண்ணு தான் வேண்டும் என கூறுவதற்கான காரணத்தை கூறினார். அதனை கேட்கும்போது, நியாயமாகவே இருந்தது. நண்பர் அரசு ம ருத்துவராக உள்ளார். தினமும் நூறுக்கும் மேற்பட்ட நோ யாளிகளை பார்க்க வேண்டியுள்ளது. இது இல்லாமல் ஆ ப்ரேஷன் செய்த நோ யாளிகளையும் பார்க்க வேண்டியுள்ளது. இதோடு அ வசர கேஸ் எல்லாம் வரும். தன்னால் சக கணவன் போல காலையில் சென்று, பொழுது சாய்ந்த நேரம் வீட்டிக்குவர முடியாது. மனைவி எதிர்பார்க்கும் நேரம் தன்னால் மனைவியுடன் இருக்க முடியாது. இந்த சூழலில் டா க்டர் பெண் இருந்தால் தான் எதையும் விளக்காமலே நிலையை புரிந்துகொள்வார். மற்ற பெண்ணாக இருந்தால் பெரும்பாலான நேரத்தில் தன்னை எதிர்பார்த்து ஏ மாற்றம் தான் அடைவார்.
அதேபோல் தன்னுடைய நிலையை விளக்கி கொண்டிருக்க வேண்டும் என கூறினார். மேலும் தன்னுடன் வேலைசெய்யும் சக ம ருத்துவர் இப்படித்தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லாமல் தினமும் ச ண்டை நடந்துகொண்டிருக்கிறது. அந்த பெண் சந்தேகம் படுவது போல் தெரிவதாக சக ம ருத்துவ நண்பர் தினமும் வந்து புலம்பி கொண்டிருக்கிறார் என எங்களுடைய நண்பர் கூறிய பின்னர் அவரது எதிர்ப்பார்ப்பின் பின்னணி புரிந்தது. இதனால் தான் பெரும்பாலான ம ருத்துவர்கள் ம ருத்துவர்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்களோ?