பிரபல தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவில் தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்ததாகவும், அவர் சென்ற கார் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் இரண்டு நண்பர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இவர் யாஷிகாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா ஆனந்த் சென்ற கார் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெரும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.