தேர்தல்களை ஒத்தி வைக்கக் கூடாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
தேர்தல்களை ஒத்தி வைப்பது எந்த வகையிலும் செய்யக் கூடாது. தற்போதைய கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் முதல் தடவையாக தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் எட்டு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல்களை நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.