தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 91 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளது.
மேலும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 46 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இதுவரை 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளும் 10 சுயாதீன வேட்பாளர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.