தெலுங்கில் வெளியான சீதாராமம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர்.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் ‘சீதாராமம்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை மிருணாள் தாக்குர் பெற்றார்.
அப்போது விருதை அளித்த அல்லு அரவிந்த், மிருணாள் தாகூர் தெலுங்கு மணமகனைப் பார்த்து சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறினார்.
இதற்கு சிலர், மிருணாள் தாக்குர் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்யபோகிறார் என்று தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மிருணாள் தாக்குர், நான் தெலுங்கு நடிகரை காதலிக்கவில்லை, திருமணம் செய்யவில்லை. அந்த விழாவில் அல்லு அரவிந்த் விளையாட்டாக பேசினார் அவ்ளோ தான் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.