ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொரில் சேவையாற்றுவதற்காக சபாநாயகர் தலைமையிலான 12 பேர் கொண்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் தலைமையிலான 12 பேர் கொண்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் இன்று சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பிரேரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, நிமல் சிறிபாலடி சில்வா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், காமினி லொக்குகே , விஜித்த ஹேரத், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாகல காரியவசம் ஆகியோர் தெரிவுக்குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.