முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமான SQ-468 இல் சிங்கப்பூர் வழியாக தென் கொரியா நோக்கி அவர் பயணித்துள்ளார்.
தென்கொரியாவில் நடைபெறவுள்ள உலக சமாதான உச்சி மாநாட்டில் சிறப்புரையாற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே அவர் அங்கு சென்றுள்ளார்.
அவருடன் குறித்த விஜயத்தில் மேலும் இருவர் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.