யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராசா செல்லமுத்து அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலக்குமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகரன்(கனடா), கிரிகரன்(பிரித்தானியா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாதவி, யாழினி, கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான முத்துராசா, தாமோதரம்பிள்ளை மற்றும் அருளானந்தம், காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், தயாளன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, தங்கலக்சுமி, கண்மணி மற்றும் சரஸ்வதி காலஞ்சென்ற நடராசா, பூமணிதேவி, விக்கினேஸ்வரி, தவமலர், கலாரஞ்சினி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விசாகன், ஓவியா, வைஷாலி, வைஷ்விகா, சகானா, சாஜனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.