யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், அச்செழு, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், யாழ். அச்செழுவை தற்போதைய
வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா அன்னலட்சுமி அவர்கள் 09-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வீரகத்தி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மணியம், சின்னராசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான றோசு, ராசம்மா, ராசமலர், ஐயாத்துரை, ராசு மற்றும் நல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அகிலாண்டேஸ்வரி(நெதர்லாந்து), சிவகுமார்(அச்செழு), காலஞ்சென்ற கஜேந்திரகுமார்(சுவிஸ்), புஸ்பலதா(அச்செழு), பிறேமலதா(சுவிஸ்), ஜெயலதா(கனடா), சுதேசகுமார்(சுவிஸ்), மாவீரர் பாலகுமார், நந்தகுமார்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அப்பையா(நெதர்லாந்து), ஜெயா(அச்செழு), லீலா(சுவிஸ்), கலாகரன்(அச்செழு), தங்கவேலு(சுவிஸ்), கேதீஸ்(கனடா), சுதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிந்து (ஜேர்மனி), செந்தூரன், இந்து, நல்லூரன்(நெதர்லாந்து), சார்ணன், தனுசன், தனுசி, ஈழவன், சுவர்ணன்(சுவிஸ்), கெவின், சிந்துஜன்(கனடா), டிசாந், உசாந், சனா, லதுசன், பானுசன்(அச்செழு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சன்சிகா, சஜானா(ஜேர்மனி), அமிர்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.