யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி நாகராஜா அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவனடியார், சகுந்தலை தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு நாகராஜா(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- சுகாதார திணைக்களம் யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலா, புஷ்பராஜா, கௌசலா, மஞ்சுளா, அனுலா, சிவராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் புனிதவதி, செல்வநாயகம், மருங்கவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகராஜா, அன்ரோனிரா, ஜோன்சன், முருகேசன், ராஜகுமாரன், இரீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மைதிலி-டென்சன், மாதினி-ரசில், ஸ்ரிபன்-மாதுளா, நிரோஜினி-நிருசாந், ரிநியுஸ், பிரசாந், கபில், தர்சன், சரவணன், குபேரன், பவித்ரா, சுதர்சினி, எமிலி, இசபெல்லா, நிக்கோல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹரிசன், ஜெரிசன், லியானா, அலினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.