யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், வவுனியா, கொழும்பு, மருதானை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவமணி அவர்கள் 05-07-2023 புதன்கிழமை அன்று சுன்னாகத்தில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குழந்தை வடிவேல், சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தராம்பாள், காலஞ்சென்ற பூரணம், ஐயாத்துரை, யோகரட்ணம், நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிலோனி(இலங்கை), ராஜினி(கனடா), காலஞ்சென்ற ஈஸ்வரன், கிருஷ்ணா(கனடா), ஸ்ரீகணேசா(ஐக்கிய அமெரிக்கா), கதிரினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மராஜா(இலங்கை), காலஞ்சென்ற ராஜேந்திரன், கவிதா(பிரித்தானியா), பிரியா(கனடா), சங்கீதா(ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனோலினா, ரஜினன், ரதுனன், ஸ்ரீகுமாரா, ரஜிந்தா, ஈருஷனா, சஹானா, முனிஷ்ராம், கரீனா, கிபிஷா, சங்கவி, ஆர்மிகா, விபீஷன், விகாஷா, மயிலோன், ஏரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதவன், மிதுலா ஆகியோரின் பாட்டி மாமியாரும்,
ஆதிரன், ஆதுரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.