யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், 9ம் பண்ணை கனகபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை ஜெறோம் பிராங்க் அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்ரன் செல்லையா, ஜேட்ருட்டம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அக்னேஸ் மரியம் றாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
அவ்றினா ஜெறோமி, அனெஸ்ரா சிறோமி, டேரியஸ் மரியன், கிறிஸ்ரபேல் சர்மி, கிறேஷியன் மோறிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லியோஜொய், பற்றிமாமெரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கொல்மன் பஸ்ரியன், பசில் றெஜினோல்ட், அன்ரனினா(நினா), அனெஸ்லி யோககுமார், ஜீன் ஜீவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேரி விக்ரோறியா, பிரான்சிஸ் சந்திரா ஆகியோரின் மைத்துனரும்,
பிளேவியன், அஞ்சலிக்கா, எல்வியன், டானியலா, சியோனா, பிறயன் பிராங், ஸ்ரேவானி, சொவியா, தனிஜா, ஷானியா எமி, நற்ராலியா, சுவர்ணியா, ஜோடன் கிஷோர் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.