யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Hampshire Fareham ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பஞ்சலிங்கதுரை அவர்கள் 04-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று தனது தாய் மண்ணில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தையல்முத்து விஸ்வலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், இளையதம்பி சீனிவாசன் மகேஸ்வரி சீனிவாசன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகாந்தா(ரூபி- பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
மது(பிரித்தானியா), சயிஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகோபன்(பிரித்தானியா), சசிகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெடன்வேல், லயாரதி, அஞ்சலிசக்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கு.வி.செல்லத்துரை, கு.வி.தம்பிதுரை, மனோன்மணி முத்துத்தம்பி, ரஞ்சிதம் விஸ்வலிங்கம், கு.வி.மகாலிங்கதுரை, கமலாம்பிகை கனகசபை, கு.வி.அமிர்தலிங்கத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரிமளம், புஸ்பமணி, முத்துத்தம்பி, ரஞ்சி, கனகசபை, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன், மகேந்திரன், ஜெயமங்களம், ஜெயநாயகி, கிரிதரன், நாகராணி, கிளி, தங்கா, குமுதினி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயபாலன், உதயன், சிவன் மற்றும் வசந்தா, இந்திராணி, கௌரி, வரன், காலஞ்சென்ற ஜெயந்தி, வதனி, சுகுனா, சிவபாலன், பிரதீப், பிரசாந்த், வித்தியா, சத்தியா, சசி, கௌசி, நந்தா, பிரபாகரன், பிரசாந்தி, பிருந்தாவன், பிரதாபன், பிரகாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.