கொழும்பைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Freudenberg ஐ வதிவிடமாகவும் கொண்ட பங்கிரஸ் ஆன்செல்ம் தேவேந்திரநாத் அவர்கள் 22-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானா பொன்னையா பங்கிரஸ் செபஸ்தியம்மா தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்றவர்களானா கேப்ரியல் அன்னபூவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மெக்டலின்(சகுந்தலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோய் வினோதன், ஹென்றி அரவிந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெகநாத், காலஞ்சென்ற ரவீந்திரநாத், நிர்மலர்தேவி, சுரேந்திரநாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகரத்தினம், செல்வரதி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்.
சண்யா, மடோனா, ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஜொனாத்தன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
நிர்மலா, சுசீலா, விமலா, வற்சலா, ஜேம்ஸ், காலஞ்சென்ற ஜூலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவா, ஜெகா, பபியோலா, ஜோன்சன் ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.