கொழும்பு கேகாலை வரக்காபொலையைப் பிறப்பிடமாவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தனம் கணேஷன் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சந்தனம் எல்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்திய கலாரஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
பெறாமகளான ஸ்ரீ கிருஷ்ணிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜனகன் பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற வெங்கடேஸ்வரன், வெங்கட்டம்மாள்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணகுமார் முத்தையா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஸ்ரீரஞ்சன், ஜெயரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரனதீரன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.