ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்ததிசநாயக்கவிற்கு அமைச்சு பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023 வரவு செலவுதிட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக துமிந்த திசநாயக்க அரசாங்கத்துடன் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் துமிந்த திசநாயக்க அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் துமிந்த திசநாயக்க மின்சக்தி அமைச்சராக அவர்நியமிக்கப்படலாம் எனவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.