பொதுவாக அனைவரது வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டுமே அவர்களது கிரக நிலைகளை அடிப்படையாக நடக்கக் கூடியவை
அதிலும் திருமணம், காதல் என வரும் போது “ஜாதகம்” மிக முக்கிய இடம் பிடிக்கிறது.
இயல்பான வாழ்க்கையில் ஒரு துணையுடன் இணைந்து வாழ ஆரம்பித்து விட்டால் மனதிற்குள் அவர்களை பற்றிய பல கேள்விகள் எழும். இது அவர்கள் இருக்கும் சூழ்நிலையை பொறுத்து மாறவும் ஆரம்பிக்கும்.
இப்படியான நேரங்களில் துணையிடம் அதனை வெளிப்படுத்த முடியாமல் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இந்த மனநிலை எல்லோருக்கும் இருக்காது. குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மாத்திரமே இப்படியான முடிவுகளை எடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
அந்த வகையில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உங்கள் துணை மீது ஏற்படும் தேவையற்ற சந்தேகங்களை குறைந்து கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையை முற்றிலும் அழித்து விடலாம்.
சில வேளைகளில் நீங்கள் திருமணமாகாதவர் என்றால் உங்களுக்கு நல்ல வரன் தேடி வரும். அவசரப்பட்டு சில முடிவுகளை நீங்களே எடுப்பதால் தேவையற்ற வாக்குவாதங்கள் வளர ஆரம்பிக்கும்.
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அவர்களின் துணையுடன் அதிகமாக சண்டை பிடிப்பார்கள். அவர்களின் கருத்தில் ஆணித்தனமாக இருப்பார்கள். இது போன்ற நேரங்களில் வீண் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.
துணையுடன் எவ்வளவு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கை நன்றாக இருப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.
காதல் வாழ்க்கையில் நம்பிக்கை ஆழமானதாக இருக்கும். துணையுடன் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். திருமணத்திற்கு பின்னர் ஒருவருக்கொருவர் மன விட்டு பேசிக் கொள்ளுங்கள்.
இருவரின் எதிர்காலத்தைப் பற்றியும் விவாதிக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை சரிச் செய்ய முயற்சி செய்யுங்கள். இது ஒரு நல்ல தீர்மானமாக இருக்கும்.