பூட்டிய வீட்டில் தாய் மற்றும் மகன் கருகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கமலா(50)மற்றும் அவரது மகன் குரு (17) என தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் தாய் மற்றும் மகன் ஆகியோர் பகல் முழுதும் வெளியில் வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
இதன்போது தாய் மற்றும் மகன கருகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற அக்கம்பக்கத்தினர் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இவர்கள் தூங்கும் போது விரோதிகள் பெட்ரோல் ஊற்றி பற்றவைத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் தாயிடம் தகராறு மேற்கொண்டிருந்த மகனின் சித்தி இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் எனவும் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.