திஸ்ஸமஹாராம கிரிந்த கடற் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 329 கிலோகிராம் போதைப்பொருள் தொகையை நாட்டின் கடற்பரப்புக்கு கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
மாத்தறை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி படகுடன் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த கடற்கரை பகுதியில் 349 கோடி ரூபா பெறுமதியுடைய 329 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்கள் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர்
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தங்காலை குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் குழுக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
குறித்த போதைப்பொருட்களை கடல் மார்க்கமாக படகின் மூலம் நாட்டிற்கு கொண்டுவந்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 6 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருட்களை 18 உரப்பொதிகளில் பொதியிட்டு கடல்மார்க்கமாக அவற்றை தரையிறக்கி அவற்றை சிறிய படகில் ஏற்றுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திஸ்ஸமகாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணைக்குட்;படுத்தப்பட்டுள்ளனர்
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளானது தங்காலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக்கட்டாவின் உதவியாளரான டுபாய் ரன்மல்லி’ என்பவருக்கு சொந்தமானதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
டுபாய் ரன்மல்லி குறித்த போதைப்பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக சந்தேக நபர்களுக்கு 5 லட்சம் ரூபா பணம் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சந்தேக நபரிகளிடம் மேற்கொள்ப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில்; போதைப்பொருட்களை கொண்டுவந்ததாக கூறப்படும் படகினை கண்டுபிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது
இதனடிப்படையில் கசுன்புத்தா என்ற குறித்த மீனவப்படகு சந்தேகநபர்கள் ஐவருடன் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது
அத்துடன் சந்தேக நபர்களை ஐவரை தடுப்புக்காவலில் விசாரிப்பதற்கும் தங்காலை பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்

