திருமணத்தின்போது மணமகனும் மணமகளும் பரஸ்பரம் பரிசுகள் கொடுக்கும் வழக்கம் பெரும்பாலான நாடுகளில் உள்ளது.வசதிக்கேற்ப, சிலர் மோதிரம் கொடுப்பார்கள், சிலர் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக கொடுப்பார்கள்.இன்னும் கொஞ்சம் அதிக வசதி கொண்டவர்கள் மோட்டார் சைக்கிளோ காரோ கொடுப்பார்கள்.
ஆனால், அமெரிக்காவில் ஒரு பெண் யாரும் எதிர்பாராத ஒரு விலையுயர்ந்த பரிசை கணவனுக்கு கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளார்.Janeen Solerக்கும் Trederick Grayக்கும் மியாமியில் மார்ச் மாதம் 7ஆம் திகதி திருமணம் ஆனது.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், Janeen, நீங்கள் எனக்கு கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத திருமணத்தை பரிசாக கொடுத்தீர்கள், உங்களுக்கு என்ன பரிசு கொடுப்பது என எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் உங்களிடம் எல்லாமே இருக்கிறது, உங்களிடம் இல்லாத எதைக் கொடுப்பது என எனக்குத் தெரியவில்லை.
ஆகவே, நாம் மியாமியிலிருப்பதால் இதை உங்களுக்கு பரிசாக கொடுக்கிறேன் என கூட்டத்தை விலக்கி தங்களுக்கு பின்னால் காட்டுகிறார். அவர் காட்டிய திசையில் மணமகன் மட்டுமல்ல, திருமணத்துக்கு வந்த விருந்தினர்களும் ஆவலுடன் எட்டிப் பார்க்கிறார்கள்.
அங்கே தண்ணீரில் ஒரு ஆடம்பர படகு நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு விலையுயர்ந்த ஒரு படகை தனக்கு பரிசாக கொடுத்ததை எண்ணி, வார்த்தை வராமல் திக்குமுக்காடி நிற்பது மணமகன் மட்டுமல்ல, திருமணத்துக்கு வந்த விருந்தினர்களும்தான்.